ஐபிஎல் போட்டியில் தனது பங்களிப்பை முழுமையாக அளித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரின் அதிரடி அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் பல முக்கிய சிறப்பு அம்சங்கள் நடைபெற்று வந்தாலும் சென்னை ரசிகர்களை பொறுத்தவரை தோனியை காண வேண்டும் என்பதற்காகவே மைதானத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் தனது முழு பங்களிப்பை கொடுத்து வந்த தோனி இந்த வருடமும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காமல் நன்கு விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியை ருத்ராஜிற்கு வழங்கிய தோனி அதன்பிறகு அனைத்து முடிவுகளையும் கேப்டனிடமே கேட்க வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
ஆனால் போட்டியின் போது மற்ற வீரர்கள் தோணியிடமே அணைத்து அறிவுகளையும் கேட்டு வருகின்றனர். குறிப்பாக நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தால் தோனியிடமே சென்று ரிவ்யூ கேட்க சொல்கின்றனர். அதற்கு தோனி மிகவும் கூலாக நான் கேப்டன் இல்லை அவரிடம் கேளுங்கள் என்று கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதே போல் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிக்ஸர் பௌண்டரிகள் என விளாசி வருகிறார். எனவே அவர் சிறு வயது தோனி போல் விளையாடுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரன்கள் ஓடுவதும் இடையே வீரர்களிடம் பல நல்ல அறிவுரைகளை கூறுவதும் என சிறந்த சீனியராக நடந்து வருகிறார். எனவே தற்போது இருக்கும் பார்மை அவர் தொடர வேண்டும் எனவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
RPF SI & Constable Study Materials PDF
ஆனால் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று தோனி தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்று மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் இருந்தாலும் தோனி அடுத்த வருடம் விளையாடினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் இனிவரும் போட்டிகளில் நன்றாக செயல்பட்டு இருக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது.
அணியின் மற்ற மூத்த வீரர்களாகிய ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோரும் தங்களது முழு பங்கினை அணிக்காக வழங்கி இந்த வருடம் தோனிக்காக கோப்பையை வாங்கி அவருக்கு சிறந்த இறுதி உபசரிப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் போட்டி இந்த மாதம் முழுவதும் நடைபெறுவதால் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாலை ஏழு முப்பது மணிக்கு மேல் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் பார்த்து வருகின்றனர் என்று பெற்றோர் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்தது நகைப்பை உண்டாக்கியது.