கம்பீரையை கலாய்த்த ரசிகர்?பதிலடி கொடுத்த கம்பீர்!

தனது ரசிகர் கேட்டுக்கொண்டதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனது இணையதளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கௌதம் கம்பீர் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல் செல்லும் இடமெல்லாம் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி வருவார். அவர் பயணம் செய்தாலோ, ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டாலோ, கிரிக்கெட்டின் போது வெளியில் உட்கார்ந்து இருந்தாலோ, மற்ற வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலோ எப்போதுமே முகத்தில் ஒரு ஆக்ரோஷம் கொண்டவராகவே இருந்து வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பை எப்போதாவது தான் நாம் பார்க்க முடியும். 

இதனை கருத்தில் கொண்டு அவரது ரசிகர் ஒருவர் கௌதம் கம்பீர்க்கு மிகவும் கடினமான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார். அது கிரிக்கெட் சம்பந்தமானது என்றால் அதனை தனது பேட்டிங் மூலம் இலக்கை கடந்து விடலாம். ஆனால் அவரது ரசிகர் கேட்டுக் கொண்டது என்னவென்றால் “கௌதம் கம்பீரின் முகத்தில் எப்பொழுது சிரிப்பை நான் பார்க்கிறேனோ அப்போதுதான் நான் எனது காதலனிடம் எனது காதலை சொல்லுவேன்” என்று பதாகை ஒன்றை கையில் ஏந்தி மைதானத்தில் அமர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. இதற்கு பதில் கூறும் விதமாக கௌதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் இணையதளத்தில் வெளிவந்த அந்த புகைப்படத்தை இணைத்து தான் புன்னகைக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு இருந்தார். நான் சிரித்து விட்டேன் நீங்கள் இனி உங்களது வேலையை தொடரலாம் என்ற இன்ஸ்டாகிராம் பதிவை அவர் பதிவு செய்திருந்தார். 

இது கௌதம் கம்பீரின் ரசிகர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அங்கம் வகிக்கும் கௌதம் கம்பீர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் பட்டத்தை தனது தலைமையில் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தின் நெருங்கியுள்ள நிலையில் நாளை நடைபெறும் பெங்களூர் மற்றும் சென்னை இடையான போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக இரு அணிகளுக்கும் இருந்து வருகிறது. இதில் பெங்களூர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது 18 ஓவர்களில் தங்களது இலக்கை எட்டினாலோ ரெட் அடிப்படையில் ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மோசமான விளையாட்டை விளையாடிய அந்த அணி தற்போது நல்ல நிலைமையில் உள்ளது. எனவே பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் அந்த போட்டியினை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் அந்த அணி இருந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை பெங்களூர் அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்களின் கனவு நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top