சென்னையின் சிறப்பு- ரயில் பெட்டி தொழிற்சாலை! 

Integral Coach Factory

ரயில் பெட்டி தொழிற்சாலை: இந்திய போக்குவரத்து துறையில் மிக முக்கியமான போக்குவரத்தாக அமைந்திருப்பது ரயில் போக்குவரத்து. இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி புதிய ரயில் சேவைகளை அளித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு ஆற்றுவது சென்னையில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து ரயில் பெட்டியை இறக்குமதி செய்வதை குறைத்து விட்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று ரயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை வகுத்தது.

5 Most Common Mistakes Exam Aspirants Make!

தோற்றம்:

Integral Man

ரயில் பெட்டி தொழிற்சாலை: 1949ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்தியாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை நிறுவப்படும் என்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் கோபாலசாமி அய்யங்கார் தெரிவித்தார். பின்னர் 1951ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் ரூ.7.47 கோடி செலவில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை கட்டப்பட்டு 1955ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பர்னிசிங்(Furnishing) பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது.

உற்பத்தி பிரிவு 

தற்போது இணைப்பு பெட்டி தொழிற்சாலைய ஷெல்(Shell) மற்றும் பர்னிஷிங் பிரிவை கொண்டுள்ளது இதில் ஷெல் பிரிவில் ரயில் பெட்டியின் வெளிப்புற கட்டமைப்பு மட்டும் உருவாக்கப்படும். பிறகு பர்னிஷிங் பிரிவில் இருக்கை, கழிவறை உள்ளிட்ட உட்புற வசதிகள், மின் உபகரணங்கள் மற்றும் பிற குளிர்சாதன வசதிகளை உள்ளடக்கிய வேலைப்பாடுகள் இந்த பிரிவில் நடைபெறும். இங்கு ஷெல் பிரிவு 14 அலகுகளைக் கொண்டதாகவும் பர்னிஷிங் பிரிவு எட்டு அலகுகளை கொண்டதாகவும் உள்ளது. இந்த தொழிற்சாலை நிறுவப்பட்ட போது 350 ரயில் பெட்டிகளை தயாரித்து வந்த நிலையில் தற்போது 2019-20 இல் அதிகபட்சமாக 4166 பெட்டிகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் சேவைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.

தயாரிப்புகள்:

 2018ஆம் ஆண்டு சென்னை இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் ‘ட்ரெயின் 18’ எனப்படும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை தயார் செய்து இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மத்திய அரசின் இலக்கை எட்டியது. 80 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலின் முதலாவது ரயில் சேவையை பாரதப் பிரதமர் 2019ஆம் ஆண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏற்றுமதி

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முதலில் தாய்லாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்தியா தற்போது அங்கோலா, பங்களாதேஷ்,  மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, தைவான், வியட்நாம், தன்சானியா, ஜாம்பியா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

வசதிகள்: 

சென்னையில் இயங்கி வரும் இந்த இணைப்பு பெட்டி தொழிற்சாலை 2011 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு காற்றாலையை நிறுவியது. இதன் மூலம் கிடைக்க பெறும் மின்சாரம் மூலம் தொழிற்சாலையில் 80% மின்சார தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதேபோல் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேக மருத்துவமனை ஒன்றும் குடியிருப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளை மிக குறைந்த கட்டணத்தில் நடத்திக் கொள்வதற்காக திருவள்ளுவர், கம்பர் மற்றும் தொல்காப்பியர் பெயர்களில் மூன்று திருமண மண்டபங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பிறந்தநாள் கொண்டாட்டம்  போன்ற சிறிய அளவிலான நிகழ்வுகளுக்கு நன்நல மையங்களும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தென்னக ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment