வெறும் 10 ரூபாய் தான் ரயில் கட்டணம்!

வெறும் 10 ரூபாய் தான்: குறைந்தபட்ச ரயில் டிக்கெட் விலை 30 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட ரயில் கட்டணம் தற்போது அமலுக்கு வந்துள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பேசஞ்சர் ரயில் எனப்படும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மட்டும் கொண்ட ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் கொரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணத்தை பேசஞ்சர் ரயில்களுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்தை நம்பி இருக்கும் அன்றாடம் பயணம் செய்பவர்களும் பணியாளர்களும் பெரும் சிரமம் அடைந்தனர். 

எனவே சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் நேற்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்படி ரயில் கட்டணம் 40% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.

வெறும் 10 ரூபாய் தான்: உதாரணமாக முன்பு தஞ்சையில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

reduced ticket price: இதேபோல் திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு 25 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள UTS எனப்படும் ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  ‘Express Specials’ மற்றும் ‘MEMU/DEMU Express’ போன்ற ரயில்களுக்கு இந்த கட்டணக் குறைப்பு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வருகிறது.

UTS மூலம் ட்ரெயின் டிக்கெட் எடுப்பது எப்படி

பேசஞ்சர் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்ற நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சீனியர் சிட்டிசன், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான மற்ற சலுகைகளையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக பேசஞ்சர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கருத்து

தற்போது டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நேரத்தில் விலையை குறைத்து பிறகு விலை ஏற்றப்படும் என்று சிலர் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாக அதிகாரி “தற்போது குறைக்கப்பட்ட ரயில் கட்டணம் இனி விலை ஏற்றப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்”. இதனால் ரயில் பயணத்தை நம்பி உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் பொதுமக்கள் அனைவரும் வரிசையில் இன்று டிக்கெட் பெறுவதை தவிர்த்து புதிய UTS ஆப் மூலமாக டிக்கெட் எடுக்க வலியுறுத்தப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை குறைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க முடியும் என்று நம்பப்படுகிறது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட ரயில் கட்டணம் அமலில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மெட்ரோ ரயில் கட்டணத்தையும் பாதியாக குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதிக கூட்ட நெரிசல் இருக்கும் நகரங்களில் மட்டும் மெட்ரோ பயன்பாடு இருந்து வருகிறது. தற்போது திருச்சியில் புதிய மெட்ரோ உருவாக்கப்பட உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்ற வருகிறது. 

3 thoughts on “வெறும் 10 ரூபாய் தான் ரயில் கட்டணம்!”

Leave a Comment