மதுரையில் கோலாகலமாக நடைபெறும் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. ஏப்ரல் 21ஆம் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வீதி உலா புறப்பட்டு வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார்.
நேற்று தொடங்கிய இந்த திருவிழாவில் போது நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகளையும் முக்கிய அம்சங்களை பற்றி தற்போது காண்போம்.வருடத்திற்கு இரண்டு முறை மற்றும் 1 நிமிடம் மட்டுமே திறக்கப்படும் மதுரை அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி திருக்கோவில் என்று இணையவாசி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. குழந்தை ஒருவருக்கு சாமி வேடம் அணிந்து அவருடைய தந்தை அவருடைய தோளில் சுமந்து செல்கிறார். அப்போது அந்தக் குழந்தை பால் பாட்டிலை வைத்து பால் குடித்துக் கொண்டே செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக உள்ளது. பொதுவாக சித்திரை திருவிழாவின் போது பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தாலும் இந்த சம்பவம் இந்த வருடம் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
ஏப்ரல் 23ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தவர். இதற்கான போதிய பாதுகாப்பு வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழியெங்கும் சாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேல தாளங்கள் முழங்க வழி எங்கும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்வதை பார்ப்பதற்கு கோடான கோடி கண்கள் தேவை என்று மதுரை மக்களுக்கு மட்டும்தான் தெரியும்.