SSC JE 2024 NOTIFICATION OUT: SSC தேர்வாணையம் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பம் செய்வது, கல்வி தகுதிகள் என்னென்ன, வயதுவரம்பு, முக்கிய தேதிகள் மற்றும் காலி பணியிடங்கள் பற்றிய விவரங்களை தற்போது காணலாம்.
SSC தேர்வாணையம் ஆண்டுதோறும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வுக்காக அறிவிப்பாணையை வெளியிடும். இந்த வருடத்திற்கான அறிவிப்பை மார்ச் மாதம் 28ஆம் தேதி தேர்வாணையம் அறிவித்தது. இந்த பணிக்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.
இதில் இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல் கட்ட தேர்வில் அப்ஜெக்டிவ் வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் கட்ட தேர்வில் மாணவர்கள் Descriptive type மூலமாக தேர்வு எழுத வேண்டும்.
கல்வி தகுதி
- Diploma in Mechanical engineering or Graduate in Mechanical engineering
- Diploma in civil engineering or Graduate in civil engineering
- Diploma in electrical Engineering or graduate in electrical engineering.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிப்ளமோ படிப்பில் மூன்று ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் நான்கு வருடம் அல்லது டிப்ளமோ முடித்த பிறகு மூன்று வருடம் இன்ஜினியரிங் படிப்பை படித்து முடித்து இருக்க வேண்டும்.
SSC JE 2024 NOTIFICATION OUT: மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகளை பெற்ற மாணவர்கள் இந்த தேர்வை தவறாமல் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். சிறுவயதில் உயர்ந்த பதவிக்கு செல்ல இந்த தேர்வு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
RRB JE Preparation Strategy In Tamil
வயது வரம்பு
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய 30 வயது அதிகபட்ச வயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SC/ST/OBC/PH வகுப்பினருக்கு வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. வயது வரம்புக்கான சலுகைகளை பற்றி அறிந்து கொள்வதற்கு அறிவிப்பு ஆணையை படிக்கவும்.
முக்கிய தேதிகள்
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்.
- இந்த பதவிக்காக ஆன்லைன் மூலமாக 28 மார்ச் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.
- இந்த பதவிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஆகும்.
- ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- இந்த பதவிக்கான தேர்வு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் இறுதி தேதி வரை காத்திருக்காமல் கூடிய விரைவில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக விண்ணப்பிக்கலாம் என்று இருந்தால் இறுதி நாளில் சர்வர் வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
காலி பணியிடங்கள்:
இந்த தேர்வுக்கு மொத்த காலி பணியிடங்கள் 968 ஆகும். இதில் அதிகபட்சமாக Border Road Organisationல் 432 காலி பணியிடங்கள் உள்ளது. Central water commission- 120, Central public works Electrical- 121, Central public works (Civil)- 217 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த தேர்வுக்கான அறிவிப்பை வெளியாகி தேர்வுகள் நடைபெறும்.
இந்த தேர்வு தொடர்பான முழு விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிவிப்பு ஆணையை படிக்கவும். இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.