17வது IPL போட்டி மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் CSK வின் முக்கிய வீரர் அணியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அற்புதமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்று இறுதி போட்டியை வெல்வதற்கு காரணமாக இருந்த கான்வே தற்போது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
ரயில்வே WhatsApp Channel! எதற்கு தெரியுமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T-20 போட்டியின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனையில் டெவோன் கான்வேக்கு குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மே மாதம் வரை அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
வெறும் 10 ரூபாய் தான்.குறைக்கப்பட்ட ரயில் கட்டணம்!
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரமாதமாக விளையாடிய கான்வே இறுதிப்போட்டியில் CSK அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காயம் காரணமாக முக்கிய வீரர் அணியிலிருந்து விலகி இருப்பது CSK அணிக்கு பெரும் சரிவாக கருதப்படுகிறது.
இதனால் மாற்று வீரராக புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட நியூசிலாந்து அணிவீரர் ரச்சின் ரவீந்திரா ருத்ராஜ் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கும் நியூசிலாந்து வீரர்களுக்குமான இணைப்பு இந்த தொடரில் வெற்றியை தருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை வெல்வதற்கு காரணமாக இருந்த வீரர் தற்போது காயம் காரணமாக விலகி உள்ளதால் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் ரச்சின் ரவீந்தரா சிறந்த மாற்று வீரவராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தோனி
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபிஎல் கான போட்டி அட்டவணையில் பிளே ஆப் சுற்றுகளில் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டும் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு சிறந்த இறுதி உபசரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணிக்காக விளையாடாமல் ஓய்வு பெற்ற டோனிக்கு சிறந்த உபசரிப்பு கிடைக்கவில்லை.
எனவே சென்னை அணி கோப்பையை வென்று அவருக்கு சிறந்த உபசரிப்பு அளிக்கும் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு சென்னை அணி கோப்பை வெல்லுமா வெல்லாதா என்ற கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.
Pingback: Goosebumps Guarantee? மாஸாக என்ட்ரி கொடுத்த தல தோனி! - YuvBharat
Pingback: புதிதாக உருவெடுக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்! - YuvBharat
Pingback: ஆன்லைனில் விற்பனைக்கு வரும் 29 ரூபாய் அரிசி? - YuvBharat