First Driverless Metro: முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பெங்களூரில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “சீனாவில் இருந்து கடந்த வாரம் சென்னை துறைமுகத்திற்கு வந்த இந்த ரயில் தற்போது பெங்களூர் சென்றடைந்து சோதனை செய்யப்பட்டுள்ளது”.
இந்திய ரயில்வேயில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை செய்துள்ளது. இதன் சேவை பெங்களூர் மாநிலத்தில் பொம்மசந்திராவில் இருந்து ஆர்.வி சாலை வரை மொத்தம் 16 ரயில் நிறுத்தங்களை கொண்ட 19 கிலோமீட்டர் தொலைவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
First Driverless Metro: ஆறு பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்த ரயில் கனரக வாகனம் மூலம் பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டது என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு, CRCC Nanjing Puzhen Co Ltd என்ற சீன நிறுவனம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் 216 பெட்டிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ரயில் பெட்டிகள் பெங்களூர் வந்தடைந்துள்ளன. சீன பொறியாளர்கள் உதவியுடன் பெங்களூரில் இந்த ரயில் பெட்டிகள் பொருத்தப்படும்.
First Driverless Metro: இந்த ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் மஞ்சள் பாதையில் சோதனை ஓட்டங்களை நடத்தும். ஆர்வி சாலையை பொம்மசந்திராவுடன் சில்க் போர்டு வழியாக இணைக்க இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதும் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்திற்குள் மேலும் இரண்டு ரயில்களும், ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதம் இரண்டு ரயில்களும் பெங்களூருவை வந்தடையும் என்று BMRCL எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இது போன்ற ஓட்டுனர் இல்லாத ரயில் பெட்டிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
பயண நேரம்
மெட்ரோ ரயில் மூலம் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் இந்த போக்குவரத்தை அதிகம் நம்பி உள்ளனர். நீண்ட பயணத்தை மிக குறைந்த நேரத்தில் கூட்ட நெரிசல் இல்லாமல் சென்றடைவதாக மெட்ரோ பயணி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது மெட்ரோ பணிகள் பல்வேறு நகரங்களில் நடந்து வருவதால் இதன் சேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற மக்களின் கனவு நினைவாகியுள்ளது.
ரயில் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்கள் மூலமாக பல்வேறு ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ரயில்வே துறை அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த போதிலும் அனைத்து பொதுமக்களும் உபயோகப்படுத்தும் விதமாக புதிய ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கப்படும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.