வந்துவிட்டது சொகுசு ரயில்! வைரல் வீடியோ? 

Luxurious Train Coach: இந்தியாவிலேயே புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டியின் உள்பக்க தோற்றம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி சொகுசு ஹோட்டல் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த Luxurious Train Coach சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கப்பட்டதாகவும் இதில் படுக்கை அறை கழிப்பறை வசதியுடன் கூடியதாகவும், கான்பரன்ஸ் அறைகள் அதிநவீன சொகுசு வசதிகள் கூடிய ரயில் பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் தயார் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இது குறித்து தகவல் ரயில்வே நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

வெறும் 10 ரூபாய் தான்.குறைக்கப்பட்ட ரயில் கட்டணம்!

ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சொகுசு ரயில் பெட்டிகளை ரயில் நிர்வாகம் தயாரித்து வருவது இந்திய ரயில்வே துறையில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சாதாரண பொதுமக்கள் இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்யும் அளவிற்கு இதனின் கட்டணம் அமைய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

புதிய ரயில்கள்

இந்திய ரயில்வேயில் பல்வேறு புதிய ரயில்கள் உற்பத்தி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. வந்தே பாரத், வந்தே சாதாரன் போன்ற ரயில்கள் புதிதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக இந்தியா ரயில்வே அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ரயில்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பை பற்றி தற்போது பார்ப்போம்.

  1. வைஃபை வசதியுடன் கூடிய ரயில்வே கோச்சுகள்.
  2. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட கழிவறைகள்.
  3. எந்த திசையிலையும் மாற்றம் செய்யக்கூடிய இருக்கைகள்.
  4. சொகுசு படுக்கை அறைகள்.
  5. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம்.

போன்றவை மாற்றி அமைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐ.சி.எப் மற்றும் எல்.எச்.பி கோச்சுகள்

தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஐசிஎப் கோச்சுகளை முற்றிலும் மாறுதல் செய்து புதிதாக எல்.எச்.பி கோச்சுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் பழைய பெட்டிகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது.

இதை கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரயில் டிக்கெட் புக் செய்வது எளிதாக இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இந்திய ரயில்வே கட்டமைப்புகளை முற்றிலும் மாற்றியமைத்து வருகிறது. எனவே இது போன்ற புதிய ரயில் திட்டங்கள் மேலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வரும் நிலையில் ரயில்வே தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் இந்திய ரயில்வேயில் புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் பல்வேறு புதிய திட்டங்கள் உள்ளதால் பொதுமக்கள் இதை மீண்டும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Leave a Comment