Mechanical Engineering மாணவர்களுக்கான அரசு வேலை!?

mechanical books

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Enginerring) படித்த மாணவர்களுக்கு அரசு துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும், மாணவர்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதையும், அவர்கள் கையில் இருக்க வேண்டிய மிக முக்கிய புத்தகங்களைப் பற்றியும் தற்போது காண்போம்.

பொறியியல் பாடப்பிரிவில் அதிக வேலை வாய்ப்பு தரும் பாட பிரிவாக இருப்பது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவாகும். பொதுவாக செமஸ்டர் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் மாணவர்கள் கடைசி நேரத்தில் தேர்வுக்கு படித்து அதை அப்படியே தேர்வில் எழுதி தேர்ச்சி பெறுவர். ஆனால் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அவ்வாறு படித்தால் தேர்ச்சி பெறுவது கடினமாகும்.

தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிலபஸ் முழுவதையும் படித்து அதனை நன்கு புரிந்து கொண்டு விடை அளிக்க கற்றுக் கொண்டால் மட்டுமே போட்டித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும்.

மெக்கானிக்கல் முடித்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் முதன்மையாக இருப்பது GATE (Graduate Aptitude Test in Engineering) என்ற தேர்வு. இந்தத் தேர்வை ஒவ்வொரு வருடமும் IIT நடத்துகிறது. மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்விற்கு வயது வரம்பு என்பது கிடையாது. எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.

GATE

இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் ஐஐடி நிறுவனத்தில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேட் மதிப்பெண்களை வைத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக IOCL, HPCL, NLC, ONGC போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வருடா வருடம் ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. இந்த தேர்வு சற்று கடினமாக இருந்தாலும் முறையான பயிற்சி மற்றும் கடின உழைப்பு இருந்தால் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இதற்கு மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு முதல் தேர்வுக்கு தயாராக வேண்டும். 

IES (Indian Engineering service)

IES எனப்படும் இந்த தேர்வை UPSC நடத்துகிறது. மொத்தம் மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். 

  • Stage 1- Preliminary Exam
  • Stage 2- Mains
  • Stage 3- Interview

இந்த தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் பணி அமர்த்தப்படுவர். 

SSC Junior Engineer

Staff selection commission மூலம் நடத்தப்படும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்.

Stage 1- Preliminary Exam

Stage 2- Mains

இந்தத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு குறைவான காலிப் பணியிடங்களே இருப்பதால் மாணவர்கள் இந்த தேர்வுக்கு சற்று அதிகம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

RRB Junior Engineer

ரயில்வே தேர்வாணையம் மூலம் ஜூனியர் இன்ஜினியர் எனப்படும் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராக வேண்டும். பொதுவாக தென்னக ரயில்வேயில் இதுபோன்ற தேர்வில் வட மாநிலத்தவர் மட்டுமே தேர்ச்சி பெற்று வரும் நிலையில் தமிழக மாணவர்களும் இந்த தேர்வுக்கு தயாராகி தேர்ச்சி பெற வேண்டும்.

இதேபோல் தமிழகத்தில் TNPSC, TNEB, TWARD, TRB போன்ற தேர்வாணையங்கள் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு தேர்வு வைத்து காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது. மாணவர்கள் கல்லூரி பயிலும் போதே இது போன்ற தேர்வுகளுக்கு தயாரானால் எளிதாக வெற்றி பெறலாம்.

RRB Technician 2024 Notification Out-9144 vacancy

இது போன்ற போட்டித் தேர்வு எழுத தயாராகும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய புத்தகங்கள். 

For mechanical engineering students 

  1. R.S Khurmi objective book
  2. R.K Jain objective book
  3. R.K Bansal objective book
  4. Sadhu Singh objective book
  5. Made easy handbook for mechanical engineering
  6. YCT publication ( Volume 1 &2)
  7. Made easy GATE & IES old Questions

மேற்கூறிய புத்தகங்களை மாணவர்கள் நன்கு கற்று பிறகு தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றி பெறலாம். 

இந்த புத்தகங்களை படிப்பதற்கு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். போட்டித் தேர்வுக்கான அறிவிப்பாணை வந்த பிறகு மாணவர்கள் இந்த புத்தகங்களை எடுத்து படிக்காமல் கல்லூரியில் படிக்கும் போது இந்த புத்தகங்களை படித்து வைத்துக் கொள்வது நல்லது. அரசு வேலைக்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து அதற்கு தயாராகி வருவதால் யார் நன்கு ஆழமாக படிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு தேர்வுக்கு தான் தயாராக போகிறோம் என்று முடிவு எடுத்து விட்டால் இப்போதிலிருந்து இந்த தேர்வுக்கு தயாராகுங்கள். வெற்றி என்பது ஓர் இரவில் கிடைத்து விடாது. கடின உழைப்பும் விடாமுயற்சியும் மட்டுமே ஒருவரை வெற்றிப் பாதைக்கு கூட்டிச்செல்லும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top