தமிழ்நாட்டில் பழமையான பிள்ளையார் கோவில்? 

Pillayarpatti temple history : பிள்ளையாரின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாக இருப்பது பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில். கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்ச மரம் போல் கேட்டதை அனைத்தையும் இந்த கற்பக விநாயகர் அள்ளிக் கொடுப்பார் என்பதும் வெற்றி மேல் வெற்றி கொடுப்பார் என்பதும் இந்த கோவிலின் தனி சிறப்பாகும். இங்குள்ள கற்பக விநாயகரை தேசி (ஒளிமிக்க மற்றும் அழகுள்ள) விநாயகர் என்றும் அழைப்பர்.

கோயிலின் சிறப்பு

Pillayarpatti Temple History: இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் குன்றைக் குடைந்து முற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதை இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்தக் கோவிலில் இருக்கும் கற்பக விநாயகரை பொ.ஊ 4ம் நூற்றாண்டில் ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பி செதுக்கியுள்ளார்.

Pillayarpatti temple history
தமிழ்நாட்டில் பழமையான பிள்ளையார் கோவிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? 

இந்த கோவிலுக்கு சென்று வருவதன் மூலம் ஒருவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்றும் இக்கோவிலில் அமைந்துள்ள பசுபதீஸ்வரரை வணங்குவதன் மூலமாக செல்வ வளம் பெருகும் என்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆவதற்கு கார்த்தியாயினி அம்மனும் குழந்தை வரமளிக்கும் நாகலிங்க சுவாமி சன்னதி இங்கு உள்ளது இந்த கோவிலின் தனி சிறப்பாகும். சிவன் கோவிலாக இருப்பினும் இக்கோவில் பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. 

RRB APTITUDE FREE ONLINE QUIZ-2024

RRB Online classes

மேலும் இக்கோவிலில் 6 அடி  உள்ள கற்பக விநாயகர் குன்றக்குடைந்து அமைக்கப்பட்டதால் இங்கு நாம் விநாயகரை சுற்றிவர இயலாது மாறாக குன்றை மட்டுமே சுற்றிவரமுடியும். இங்கு காட்சியளிக்கும் கற்பக விநாயகர் பெருமானின் துதிகை வலம் சுழித்ததாகவும் மற்ற இடங்களில் இருப்பதைப் போல் நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு காட்சியளிப்பதும் அங்குச பாசங்கள் இல்லாமல் காட்சி அளிப்பதும், ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது இக்கோவிலில் உள்ள விநாயகரின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

இங்கு விநாயக சதுர்த்தி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அப்போது விநாயகருக்கு தேர் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் விநாயகருக்கு என தேர் திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து விநாயகரை தரிசனம் செய்து வருகிறனர். இந்த கோவில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றங்குடி அருகில் அமைந்துள்ளது. 

தமிழகத்தில் அமைந்துள்ள குடைவரை கோவில்களில் மிகவும் பழமையான கோவில் என்ற சிறப்பு பெற்ற பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள இக்கோயிலை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பூஜை நேரங்கள்

திருவனந்தாள் அபிஷேகம் காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். காலசாந்தி அபிஷேகம் காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரை நடைபெறும். உச்சிகாலம் அபிஷேகம் காலை 11.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும். மாலை சாந்தி அல்லது சாயரட்சை பூஜை மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை நடைபெறும். இரவுசாந்தி அல்லது அர்த்தஜாமன் பூஜை இரவு 07.45 மணி முதல் 08-30 மணி வரை நடைபெறும். சபரி மாலை அல்லது தைப்பூசம் பருவங்களில் (01-நவம்பர் முதல் 20-ஜனவரி வரை) காலை 06.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

Join Whatsapp GroupClick Here
Join Telegram GroupClick Here

Leave a Comment