PM கிசான் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு?

pm kisan new registration

PM kisan yojana new registration: பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 11.80 கோடி விவசாயிகள் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது இந்தத் திட்டத்தில் இணைய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தத் திட்டத்தில் மூலம் பயனடையாதவர்கள் சேர்ந்து கொள்ள அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

 PM கிசான் திட்டம் 

pm kisan yojana new registration 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் அறிவிக்கப்பட்டது. நவீன விவசாயம் வளமான விவசாயி என்ற குறிக்கோளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருவதன் முயற்சியாக விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ஆண்டு தோறும் 6000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதன் மூலமாக பல்வேறு விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தில் சேருவதற்கான மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

திட்டத்தில் சேருவதற்கான மற்றொரு வாய்ப்பு : 

இதன் மூலம் பிப்ரவரி 12 முதல் 21ஆம் தேதி வரை CSC மற்றும் PM கிசான் போர்டல் மூலமாக விண்ணப்பம் மேற்கொள்ளலாம். பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் விடுபட்ட விவசாயிகள் சேருவதற்கான வழிவகை செய்யப்படும்.

ஊரக அளவில் நடைபெறும் இந்த பிரச்சாரத்தின் வாயிலாக நாட்டில் உள்ள 78 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையலாம். இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் இணையதள வசதி இல்லாத விவசாயிகள் தங்கள் அருகே உள்ள CSCஐ தகுந்த ஆவணங்களுடன் அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் கட்டாயமாக விண்ணப்பம் செய்து பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Technician Grade 1 Computer Quiz 2024

இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டோமா என்று அறிந்து கொள்ள pmkisan.gov.in என்ற இணையதளத்தை அணுக வேண்டும். பின்னர் அதில் Know your status சென்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனை பதிவு செய்த பின்னர் இந்த திட்டத்தில் இணைந்து விட்டோமா என்பது இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

PM கிசான் போர்டல் மூலம் இணைவது எப்படி.

முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். பின்னர் New Farmer Registration சென்று உங்களின் ஆதார் கார்டு, செல்போன் எண் மற்றும் முகவரி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். இதனை பதிவு செய்த பின்னர் விவசாயிகளுக்கு என தனி ஐடி கொடுக்கப்படும் இதன் மூலமாக தங்களின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே விண்ணப்பித்த விவசாயிகள் தங்களின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிய pmkisan.gov.in இணையதளத்தில் சென்று Status of Self-Registered Farmer என்பதனை கிளிக் செய்து தங்களின் விவரங்களை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் அருகே உள்ள Common Service Centre (CSC)ஜ அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மூலமாக 2 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருக்கும் 11 கோடிக்கும் மேல் விவசாயக் குடும்பங்களுக்கு 2.8 லட்சம் கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிதி 100 சதவீதம் மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

3 thoughts on “PM கிசான் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top