ரயில்வேயில் 2860 காலி பணியிடங்கள்!? 

Railway Notification 2024 தென்னக ரயில்வே அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர் : அப்ரண்டீஸ்

அறிவிப்பு வெளியாகிய நாள் : 29-01-2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28-02-2024

காலி பணியிடங்கள் : 2860

குறிப்பு

Railway Notification 2024 கொடுக்கப்பட்டுள்ள அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பிற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபார், லக்சதீப், ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தக்ஷின கன்னடா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வயதுவரம்பு

குறைந்தபட்ச வயது : 15 வயது 

அதிகபட்ச வயது : 22 வயது ( ITI படித்தவர்களுக்கு 24 வயது)

வயது வரம்புக்கான தளர்வுகள்

OBC – 3 வருடம்

SC/ST – 5 வருடம்

PWD – 10 வருடம்

கல்வி தகுதி

10th, 12th மற்றும் ITI

விண்ணப்ப கட்டணம்

SC/ST/Women/PWD – இல்லை

Others – ₹ 100

காலி பணியிடங்கள்

10th,12th படித்த மாணவர்களுக்கு இரண்டு வருடம் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படும். இதில் கோயம்புத்தூர் – போத்தனூர் ரயில்வே பனிமணையில் பிட்டர் பிரிவில் 20 காலி பணியிடங்களும் சென்னை பெரம்பூர் பனிமணையில் பிட்டர் பிரிவில் 20 காலி பணியிடங்களும் வெல்டர் பிரிவில் 31 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மெடிக்கல் டெக்னீசியன் எனப்படும் ரேடியோலாஜி, பேத்தோலாஜி மற்றும் கார்டியோலஜி பிரிவில் 20 காலி பணியிடங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்படும் ITI முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்சி கோயம்புத்தூர் போத்தனூர், திருவனந்தபுரம், பாலக்காடு,சேலம், பெரம்பூர், அரக்கோணம், ஆவடி, தாம்பரம், ராயபுரம், மதுரை, திருச்சி பொன்மலை போன்ற இடங்களில் வழங்கப்படும். 

ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ரயில்வே தேர்வு ஆணையம் நடத்தும் Group D  தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Links
RRB Technician 2024 NotificationRRB GENERAL SCIENCE QUIZ
RRB MATHAMATICS QUIZRRB REASONING QUIZ
RRB GENERAL KNOWLEDGE QUIZ 

 

இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோல் வேலைவாய்ப்பு தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

1 thought on “ரயில்வேயில் 2860 காலி பணியிடங்கள்!? ”

Leave a Comment