RRB JE Preparation Strategy In Tamil

RRB JE Preparation Strategy In Tamil :ரயில்வே தேர்வு ஆணையம் ஜூன் மாதம் வெளியிட இருக்கும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, முதல் முயற்சியிலேயே எவ்வாறு தேர்ச்சி பெறுவது, பாடத்திட்டம், புத்தகம் மற்றும் சம்பளம் பற்றி தற்போது காண்போம்.

ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கும் ஆண்டு அறிக்கையில் ஜூன் மாதம் ஜூனியர் இன்ஜினியர் தேர்வுக்கான அறிவிப்பு ஆணை வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்தத் தேர்விற்கு மாணவர்கள் தற்போது இருந்தே தயாராவது முக்கியம். மிகவும் அதிக மாணவர்கள் போட்டியிட இருக்கும் இந்த தேர்விற்கு எப்படி தயாராவது என்ற குழப்பம் மாணவர்களிடையே இருந்து வருகிறது. எளிதாகவும் விரைவாகவும் இந்த தேர்விற்கு எப்படி தயாராவது என்பதனை தற்போது பார்க்கலாம்.

எப்படி எதிர்கொள்வது: 

RRB JE Preparation Strategy : தேர்வு அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பாகவே மாணவர்கள் தேர்வுக்காக தயாராவது முக்கியம். இந்த ஆண்டு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையில் குறைந்த அளவு ஆட்களையே தேர்வு செய்து வருகின்றனர். இனி ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படும் என்பதற்காகவே குறைந்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானை வெளிவருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே காலி பணியிடங்களை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் தயார் ஆக வேண்டும்.

முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி: 

இந்தத் தேர்வு எழுதுவதற்கான கல்வி தகுதி டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் பயின்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எந்தத் தேர்வுக்கு முதல் முயற்சியில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் சரியான பயிற்சி வேண்டும். புத்தகம் தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியம். நிறைய புத்தகங்களை படிக்காமல் தங்களிடம் உள்ள நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

RRB JE Notification 2024

சரியான பாதையில் நாம் இந்த தேர்விற்கு தயாரானால் கண்டிப்பாக இந்த தேர்வு எளிதாக வெற்றி பெற முடியும். இந்த பணியிடம் ரயில்வேயில் லெவல் 6ல் வருவதால் விரைவாக அதிகாரி ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே சிறு வயதிலேயே மாணவர்கள் இந்த தேர்வை தேர்ச்சி பெற்று அதிகாரி ஆக வேண்டும் என்றால் தற்போதையிலிருந்து தயாராக வேண்டும்.

பாடத்திட்டம் : 

இந்த தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாவது தேர்வை எழுத முடியும். முதல் தேர்வில் இன்ஜினியரிங் பாடத்திட்டங்கள் எதுவும் வராது. கணிதம்,அறிவியல், அறிவுக்கூர்மை மற்றும் பொது அறிவு பிரிவுகளில் மட்டும் 100 கேள்விகள் கேட்கப்படும். கடந்த வருடம் ஆர்ஆர்பி சென்னை கட் ஆப் மதிப்பெண் 65+ எடுத்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். எனவே இந்த வருடமும் மாணவர்கள் இந்த மதிப்பெண்ணை தாண்டி எடுக்க வேண்டும். இது கேள்வித்தாள் எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்து முடிவாகும்.

முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இரண்டாவது தேர்வு எழுத வேண்டும். இரண்டாம் கட்ட தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதில் 100 மதிப்பெண்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்படும். 50 மதிப்பெண்கள் அறிவியல், கம்ப்யூட்டர் மற்றும் பொது அறிவில் இருந்து கேட்கப்படும்.

புத்தகம்: 

இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் ஸ்டாண்டர்ட் ஆத்தர் புக்குகளை படிக்க வேண்டும். நிறைய புத்தகங்களை படிக்காமல் ஒரு புத்தகத்தை நிறைய தடவை படிக்க வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் பயின்ற மாணவர்கள் Made easy Hand book for mechanical engineering, RS Khurmi, RK Jain போன்ற புத்தகங்களை பயில வேண்டும். இதனை முழுவதுமாக படித்த பின்னர் YCT Mechanical engineering volume 1 & Volume 2 புத்தகத்தை பயில வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் :  

இந்த தேர்வில் தேர்ச்சி ஆகும் மாணவர்கள் Rs.35400 – 112400 என்ற ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவர். முதல் மாதம் சம்பளமாக அவர்களுக்கு 50,000 இருந்து 60,000 வரை கிடைக்கும். மற்ற ஜூனியர் இன்ஜினியர் தேர்வுகளை ஒப்பிடும்போது ரயில்வேயில் நடைபெறும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வு எளிதாகவே இருக்கும். மாணவர்கள் தற்போது இருந்து நன்கு தயாராகி இந்த முறை தேர்ச்சி பெற வேண்டும்.

1 thought on “RRB JE Preparation Strategy In Tamil”

  1. Pingback: SSC JE 2024 NOTIFICATION OUT-TAMIL - YuvBharat

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top