PM Surya Ghar Yojana என்ற திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்குறையில் சோலார் பேனல் அமைப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. Solar panel subsidy மானியம் பெறுவதற்கு என்ன வழிமுறைகள் உள்ளன என்பதைப் பற்றியும் எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பதை பற்றியும் தற்போது காணலாம்.
குடியிருப்புத் துறையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மானியம் வணங்கி வருகிறது. இதன் மூலம் சோலார் பேனல்களை நிறுவுவதற்கான நிதிச்சுமை 60% வரை குறைகிறது.
எவ்வளவு மானியம்?
2 kW வரை திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு ₹30,000 வரை மானியம் அளிக்கப்படுகிறது. 3 kW மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு ₹78,000 மானியம் வழங்கப்படுகிறது.
RRB Technician 2024 Notification Out-9144 vacancy
Solar panel subsidy விண்ணப்பிப்பது எப்படி
Step 1
இணையதளத்தில் பின்வருமாறு உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
Register in the portal with the following
மாநிலத்தை தேர்வு செய்த பின்னர்
மின்விநியோக நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மின் இணைப்பு நுகர்வோர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண், இமெயில் முகவரியை பதிவு செய்த பின்னர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Step 2
மின் நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு Login செய்யவும்
அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி Rooftop Solar திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்
Step 3
மின்விநியோக நிறுவனத்தில் இருந்து அனுமதி வரும் வரை காத்திருக்கவும். அனுமதி கிடைத்தவுடன், நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மூலம் Rooftop Solar install செய்யவும்
Step 4
Rooftop Solar install செய்த பின் தகவல்களை சமர்ப்பித்து மீட்டருக்கு விண்ணப்பிக்கவும்
Step 5
மின்விநியோக நிறுவனம் ஆய்வு செய்த பின்னர் இணையதளத்தில் சான்றிதழ் வழங்கப்படும்
Step 6
சான்றிதழ் கிடைத்த உடன் வங்கி விவரங்கள் மற்றும் கேன்சல் செய்த செக் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவு செய்யவும். 30 நாட்களில் இந்த திட்டத்திற்கான மான்யம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்னர் தங்கள் வீட்டிற்கு எவ்வளவு மானியம் வழங்கப்படும் என்பதனை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் கால்குலேட்டர் என்பதனை கிளிக் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து எவ்வளவு KW மின்சாரம் தேவைப்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் பல வருடங்களுக்கு மின்சார கட்டணம் இல்லாமல் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமல்படுத்த ஆர்வமுடன் உள்ளனர். எனவே மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு முதலில் வீடுகளில் பொருத்த வேண்டும். பின்னர் அதற்கான ஆவணங்களை சரி செய்து விட்டு ஆன்லைன் மூலமாக மானியத்திற்காக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு இறுதியில் தகுதி வாய்ந்த பயனாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் மானிய தொகை வரவு வைக்கப்படும். இதன் மூலமாக ஆண்டிற்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
G ottu vituku applicable ithu
Pingback: Bharat Rice sales place in Tamilnadu? With Contact Details!! - YuvBharat
Pingback: UTS Application-வரிசையில் நின்று டிக்கெட் வேண்டாம்? - YuvBharat