SSC CHSL 2024: 2024ஆம் ஆண்டுக்கான SSC CHSL அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதிகள், வயதுவரம்பு, தேர்வு தொடர்பான தகவல்கள் மற்றும் இதர தகவல்களை காணலாம்.
எஸ்.எஸ்.சி தேர்வாணையம் ஆண்டுதோறும் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிடும். மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3712 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
SSC CHSL 2024 தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி முதல் மே மாதம் ஏழாம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கான ஆன்லைன் லிங்க் மே மாதம் பத்தாம் தேதி முதல் 11ம் தேதி வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவது தேர்வு ஜூன் முதல் ஜூலை வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு லெவல் 2,4,5 சம்பளம் கொடுக்கப்படும்.
Pay Level-2 (Rs.19,900-63,200),
Pay Level-4(Rs. 25,500-81,100) and
Level-5(Rs. 29,200-92,300
என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளர்க் பணியிடங்களுக்கு லெவல் 2 சம்பளமும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் எனப்படும் பணியிடங்களுக்கு லெவல் 4 மற்றும் லெவல் 5 சம்பளமும் வழங்கப்படும் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு:
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது 18 வயது முதல் 27 வயது ஆகும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-08-1997 முன்னர் பிறந்திருக்கக் கூடாது அதேபோல் 01-08-2006 பின்னர் பிறந்து இருக்க கூடாது. இதில் வயது வரம்புக்கான சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு 5 வருடமும் ஓபிசி மாணவர்களுக்கு மூன்று வருடமும் வயதுவரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் PwBD(Unreserved)-10 வருடமும் PwBD (OBC) பிரிவினருக்கு 13 வருடமும் PwBD (SC/ ST) 15 வருடமும் வயதுவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்படுவதாக அறிவிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பம் செய்து இந்த தேர்வை தேர்ச்சி பெற்று வேலையில் சேர்ந்து விடலாம்.
விண்ணப்ப கட்டணம் :
SSC CHSL 2024 தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய். இருப்பினும் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து முழு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக கட்ட வேண்டும். விண்ணப்பம் செலுத்துவதற்கான கடைசி தேதி மே மாதம் எட்டாம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் இறுதி தேதி வரை காத்திருக்காமல் கூடிய விரைவில் தேர்வு கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
SSC CHSL 2024 தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் கட்ட தேர்வு 100 கேள்விகள் கொண்ட 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம் 25 கேள்விகள், ஆங்கிலம் 25, அறிவு கூர்மை 25 மற்றும் பொது அறிவியல் பகுதியில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இரண்டாம் கட்ட தேர்வு கணிதம், அறிவுக்கூர்மை, பொது அறிவியல், ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு கட்ட தேவைகளும் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
SSC JE 2024 NOTIFICATION OUT
தமிழக மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மட்டும் நம்பி இல்லாமல் இது போன்ற மத்திய அரசு தேர்வையும் எழுத வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் இருக்கும் பொது துறை மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களால் பணிய அமர முடியும். எனவே இதுபோன்ற தேர்வை மாணவர்கள் தேர்வு செய்து எழுத வேண்டும். இதில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பத்தாம் வகுப்பு தரத்திலேயே இருக்கும் என்பதால் மாணவர்கள் அதைக் கண்டு அஞ்ச தேவை இல்லை.
போதுமான பயிற்சி மற்றும் முயற்சி இருந்தாலே மத்திய அரசு தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும். பொது அறிவியல் பாடப் பிரிவில் மாணவர்கள் சிபிஎஸ்சி புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னர் தெரிவித்திருந்தனர். இதனால் தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ புத்தகத்தை படிக்க முடியாமல் திணறி வந்தனர். ஆனால் தற்போது தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் பள்ளி புத்தகங்கள் அனைத்தும் சிபிஎஸ்சி தரத்திலேயே உள்ளது. இன்னும் சொல்லப் போனால் சிபிஎஸ்சி தரத்தை விட அதிகமாகவே உள்ளது. எனவே தமிழக மாணவர்கள் தமிழக பள்ளி புத்தகங்களை நன்கு பயின்று மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி பெற எங்களது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு ஆணையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.