Rozhar Mela Igot Karmayogi: மத்திய அரசு வேலைவாய்ப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12ஆம் தேதி வழங்க உள்ளார்.
மத்திய அரசு பணியிடங்களில் காலியாக இருந்த வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வாணையங்கள் நடத்திய பல்வேறு கட்ட தேர்வுக்கு பின்னர் மாணவர்கள் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
RRB Classes in Tamil
Rozhar Mela Igot Karmayogi: இவர்களுக்கான பணி ஆணையை ரோஸ்கர் மேளா எனப்படும் நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி காணொளி வாயிலாக வழங்க உள்ளார். நாடு முழுவதும் 47 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக புது தில்லியில் கட்டப்பட்டு வரும் கர்மயோகி பவன் கட்டடத்தின் முதல் கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் காலை 10:30 மணி போல் காணொளி வாயிலாக நாடு முழுவதும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பணியாணையை வழங்குகிறார்.
நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் அளித்த உறுதிபாட்டை நிறைவேற்றும் விதமாக பல கட்டமாக இந்த வேலை வாய்ப்பு திருவிழா என்கின்ற ரோஜ்கர் மேளா நடைபெற்று வருகிறது. மேலும் அரசு வேலையில் சேரும் தேர்வர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளும் விதமாக iGOT Karmayogi என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலமாக அரசு வேலையில் புதிதாக சேரும் தேர்வர்கள் 880க்கும் மேற்பட்ட படிப்புகளை ஆன்லைன் வாயிலாக தாங்களாகவே கற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளம் மூலமாக கற்கப்படும் படிப்புகளுக்கு உடனடியாக சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. பணியில் சேர்ந்த ஒவ்வொருவரும் இந்த படிப்பை கட்டாயம் கற்று அதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேர்வதற்கான ஆர்வம் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலி பணியிடங்களில் தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரயில்வேயில் வேலைவாய்ப்பு தொடர்பான ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 6 வரையிலான ஊதிய அடிப்படையில் அனைத்து வேலைக்கும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உதாரணமாக பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான குரூப் டி தேர்வு, ஐடிஐ படித்த மாணவர்களுக்கான டெக்னீசியன் தேர்வு, இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கான ஜூனியர் இன்ஜினியர் தேர்வு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான என்.டி.பி.சி தேர்வு நடைபெற உள்ளது.
மாணவர்களின் கோரிக்கையை தொடர்ந்து இனி ஆண்டுதோறும் ரயில்வேயில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்று ரயில்வே துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.