ஆன்லைனில் விற்பனைக்கு வரும் 29 ரூபாய் அரிசி?

bharat rice online

Bharat rice online கடந்த ஒரு வருடத்தில் அரிசியின் விலை 15 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து மத்திய அரசு பாரத் அரிசி என்ற குறைந்த விலை அரிசியை விற்பனை செய்ய முடிவு செய்தது. அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்திலேயே இதற்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது இந்த 29 ரூபாய் பாரத் அரிசி ஆன்லைனில் விற்பனைக்கு வர இருப்பதற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி குறைந்த விலையில் பாரத் அரிசி விற்பனைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை NAFED, NCCF மற்றும் நடமாடும் 100 வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கோலாரில் விற்பனைக்காக கொண்டு வந்த 10,000 கிலோ அரிசி விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்தது. 

Bharat rice vendors
Bharat rice vendors

பொதுமக்கள் ஐந்து மற்றும் 10 கிலோ பேக்குகளில் அரிசியை வாங்கிச் சென்றனர். பெரும்பாலானோர் அரிசி கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பியதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து குறைந்த விலை பாரத் அரிசி ஆன்லைன் மூலமாக விற்கப்படுகிறதா என்று நெட்டிசன்கள் தேடத் தொடங்கினார். 

CSK விழுந்த பெரிய அடி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Bharat rice online ஆனால் தற்போது வரை பிளிப்கார்ட் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் விற்பனையை தொடங்காத நிலையில் ஜியோ மார்ட் மட்டும் தங்களது விற்பனையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை ஜியோ மார்ட் தனது விற்பனையை தொடங்குவதற்கான லிங்கை ஆக்டிவேட் செய்யாமல் உள்ளது. எனவே ஜியோ மார்ட் மூலமாக பாரத் அரிசி விரைவாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக FCI ஐந்து லட்சம் டன் அரிசியை விற்பனை செய்வதற்காக NAFED, NCCFவிடம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இவர்கள் இதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யாமல் நேரடி விற்பனை மட்டுமே செய்து வருகின்றனர். அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டையுடன் கூடிய அரிசியை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நியாய விலை கடைகளிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னதாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மளிகை விலையில் கோதுமை மற்றும் பருப்பை விநியோகித்து வருகிறது. கோதுமையின் விலை கிலோவிற்கு ₹ 27.50 ரூபாய்க்கும் பருப்பு ஒரு கிலோ ₹60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த மலிவு விலை அரிசி, பருப்பு மற்றும் கோதுமை வழங்கும் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் வரலாறு காணாத விலை ஏற்றத்தில் இருக்கும் மளிகை மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள இந்த அரிசியை வண்டி மற்றும் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் நியாய விலை கடைகளில் இந்த அரிசியை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

1 thought on “ஆன்லைனில் விற்பனைக்கு வரும் 29 ரூபாய் அரிசி?”

  1. Winston here from Iowa. I’m always watching to see what newer sites are going up and I just wanted to see if you would like an extra hand with getting some targeted traffic, create videos/images/adcopy, remove negative listings, the list goes on. I’ll even shoulder 90% of the costs, dedicating my time and tools that I’ve created myself and bought over the years. I’ve been doing this for over 22 years, helped thousands of people and have loved every minute of it.

    There’s virtually no cost on my end to do any of this for you except for my time starting at 99 a month. I don’t mean to impose; I was just curious if I could lend a hand.

    Brief history, I’ve been working from home for a couple decades now and I love helping others. I’m married, have three girls and if I can provide for them by helping you and giving back by using the tools and knowledge I’ve built and learned over the years, I can’t think of a better win-win.

    It amazes me that no one else is helping others quite like I do and I’d love to show you how I can help out. So, if you need any extra help in any way, please let me know either way as I value your time and don’t want to pester you.

    PS – If I didn’t mention something you might need help with just ask, I only mentioned a handful of things to keep this brief 🙂

    All the best,

    Winston
    Cell – 1-319-435-1790‬
    My Site (w/Live Chat) – https://cutt.ly/9wEWIZbQ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top