இரயில்வே கட்டமைப்பு : பல நூற்றாண்டுகளாக மனித குலத்தின் இன்றியமையாத போக்குவரத்தாக இரயில்வே போக்குவரத்து இருந்து வருகிறது.இரயில்கள் மூலம் உணவு பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் ஏராளமான மக்கள் இரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர்.இவ்வாறு இன்றியமையாத போக்குவரத்தாக மாறியுள்ள இரயில் போக்குவரத்தில் உலகின் மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பு பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்திய இரயில்வே துறை இடம் பெற்றுள்ளது.
முதல் இடம்- அமெரிக்கா
உலகின் பத்து மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பு பட்டியல்
இந்த பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருப்பது அமெரிக்க இரயில்வே துறை. அமெரிக்க இரயில்வே துறையில் தண்டவாளத்தின் நீளம் 220,480,மின்மயமாக்கப்பட்ட பாதையின் நீளம் 2,025 அதாவது 0.92%.இதை அரசு மற்றும் தனியார் இணைந்து நடத்துகின்றனர்.இங்கு கிளாஸ் 1 என்றழைக்கப்படும் ஏழு மிகப்பெரிய இரயில் பாதைகள் நாட்டின் 90% சரக்கு இரயில் பாதைகளாக உள்ளன.
இரண்டாம் இடம் – சீனா
சீனா உலகின் மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பில் 150,000 கி.மீ தண்டவாள நீளத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.வருடத்துக்கு 10,000 கி.மீ நீள தண்டவாளங்களை அமைப்பதன் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் இரயில்வே கட்டமைப்பை கொண்ட நாடாக உருவாகி உள்ளது.
மூன்றாம் இடம் – ரஷ்யா
மொத்தம் 105,000 கி.மீ தண்டவாள நீளத்துடன் ரஷ்யா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.மாஸ்கோ முதல் விளாடிவோஸ்க் வரை செல்லும் 9,000 கி.மீ நீளமுள்ள இரயில்வே கட்டமைப்பு உலகின் மிக நீளமான இரயில்வே கட்டமைப்பாக உள்ளது.
நான்காம் இடம் – இந்தியா
92,952 கி.மீ தண்டவாள நீளத்துடன் இந்திய இரயில்வே நான்காம் இடத்தில் உள்ளது.நாளொன்றுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணம் செய்வதன் மூலம் உலகின் மிகப்பெரிய பயணிகள் இரயில்வே கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
RRB General Science Quiz-2024
ஐந்தாம் இடம் – கனடா
மொத்தம் 49,422 கி.மீ நீளத்துடன் கனடா ஐந்தாம் இடத்தில் உள்ளது.வான்கோவர் முதல் ஹலிஃபக்ஸ் வரையிலான 6,000 கி.மீ தூரம் கொண்டு வட அமெரிக்க நாடுகளில் மிக நீள இரயில்வே கட்டமைப்பு கொண்ட நாடாக விளங்குகிறது.
ஆறாம் இடம் – ஜெர்மனி
40,625 கி.மீ நீளத்துடன் ஜெர்மனி நான்காம் இடத்தை பெற்றுள்ளது.இங்கு 6,000 அதிகமான இரயில் நிலையங்கள் உள்ளன.
ஏழாம் இடம் – அர்ஜென்டினா
அர்ஜென்டினா உலகின் மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பு பட்டியலில் 36,966 கி.மீ நீளத்துடன் ஏழாம் இடத்தில் உள்ளது.பியூனஸ் அயர்ஸ் முதல் உசுவாயா வரை 3,000 கி.மீ தூரம் கொண்டு தென் அமெரிக்க நாடுகளில் மிக நீள இரயில்வே கட்டமைப்பு கொண்ட நாடாக விளங்குகிறது.
எட்டாம் இடம் – ஆஸ்திரேலியா
இந்த நாட்டின் இரயில் பாதையானது 33,168 கி.மீ நீளமாகும்.சிட்னி முதல் பெர்த் வரையிலான 4,000 கி.மீ தொலைவுடன் ஓசானியா நாடுகளில் மிக நீள இரயில் கட்டமைப்பு கொண்ட நாடாக விளங்குகிறது.
ஒன்பதாம் இடம் – பிரேசில்
பிரேசிலின் இரயில்வே 29,817 கி.மீ தொலைவு ஆகும்.லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக நீள இரயில்வே கொண்ட நாடாக உள்ளது.
பத்தாம் இடம் – பிரான்ஸ்
மொத்தம் 29,273 கி.மீட்டருடன் பிரான்ஸ் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது.இங்கு 30,000க்கும் அதிகமான இரயில் நிலையங்கள் உள்ளன.
இந்திய ரயில்வே போக்குவரத்து துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற நாடுகளை நம்பி இல்லாமல் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வசதியாக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை மென்மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது இருக்கும் இந்த நான்காம் இடம் என்பது கூடிய விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே போக்குவரத்தை துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வல்லரசாக மாறும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.