RRB ALP ரயில்வே இரயில் ஓட்டுநர் ஆக ஆசையா?!

ரயில்வே ALP
How to Clear ALP Exam

RRB ALP ரயில் ஓட்டுநர் என்று அழைக்கப்படும் Assistant Loco Pilot பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 5696 காலி பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி. 

ரயில்வே தேர்வு வாரியம் ALP Recruitment 2024

RRB ALP தேர்வின் நிலைகள்:

RRB ALP தேர்வு 3 நிலைகளாக நடைபெறும். முதலாவது தேர்வு 75 மதிப்பெண்களுக்கு கணினி வழி தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் இரண்டாவது கணினி வழி தேர்வு எழுத வேண்டும். இதில் இரண்டு பிரிவுகளாக வினாத் தாள்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். பகுதி‌ 1) 100 மதிப்பெண்களுக்கு கணிதம், அறிவுக்கூர்மை மற்றும் அடிப்படை பொறியியல் அறிவியல் பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்களை வைத்து தேர்வர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக பகுதி 2) 75 மதிப்பெண்களுக்கு பொறியியல் பாடப் பிரிவான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் படிப்புகளில் ஏதேனும் ஒரு தொழிற்கல்வி தேர்வு தாளை எழுத வேண்டும். இதில் 35 சதவீத மதிப்பெண்கள் அதாவது 27/75 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடத்தில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். ஆனால், இந்த பகுதி இரண்டில் பெறும் மதிப்பெண்கள் இறுதியாக வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பகுதி ஒன்றில் பெறப்படும் மதிப்பெண்கள் வைத்து இறுதி தரவரிசைப் பட்டியல் ரயில்வே வெளியிடப்படும்.

ரயில்வே தேர்வு வாரியம்

தேர்வு தாள் :

RRB ALP பகுதி இரண்டில் எலக்ட்ரிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், அர்மாச்சர் காயில் வைண்டர், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷன் பாடப்பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுத வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டிவி மற்றும் ரேடியோ மெக்கானிக் போன்ற பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுத வேண்டும்.

RRB Technician Grade 1 Computer Quiz 2024

மெக்கானிக்கல் துறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிட்டர், வெல்டர், மெக்கானிக் டிராக்டர், டீசல் மெக்கானிக், டர்னர், மிசினிஸ்ட், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங், ஹிட் இன்ஜின் மற்றும் மெயின்டனன்ஸ் மெக்கானிக் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து தேர்வு எழுத வேண்டும். ஆட்டோமொபைல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மோட்டார் வெகிகிள் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஹீட் இன்ஜின், ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனர் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து தேர்வு எழுத வேண்டும். 

இந்த இரண்டாவது நிலை தேர்வு வெற்றிகரமாக தேர்ச்சி பெரும் மாணவர்கள் மூன்றாவது தேர்வான கணினி வழி ஆப்டிடியூட் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தேர்வு வாரியம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசை பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. இரண்டாவது கட்டத் தேர்வில் பகுதி ஒன்றில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்து இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இந்த மூன்று அடுக்குகளிலும் தேர்ச்சி பெரும் மாணவர்கள் மருத்துவ பரிசோதனை தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இறுதி பணி ஆணை வழங்கப்படும். தமிழக மாணவர்கள் தமிழகத் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தாமல் இதுபோன்று மத்திய அரசு நடத்தும் தேர்விலும் கவனம் செலுத்தி படித்தால் மத்திய அரசு துறையான ரயில்வே துறை தேர்வில் வெற்றி பெற்று எளிதில் அரசு ஊழியராகலாம்.

கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்களை பற்றி பார்ப்போம். ஆன்லைன் வாயிலாக இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வின் சென்னை கட் ஆப் மதிப்பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாகவே இருந்தது.

CBT 1 Cut Off Marks

CBT 2 Cut off Marks

இந்த இரண்டாம் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் CBAT எனப்படும் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி அடைய வேண்டும். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதியாக தயாரிக்கும் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டாது. எனினும் இந்த தேர்ச்சி இந்த தேர்வினை கண்டிப்பாக குறைந்தபட்சம் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். இதில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் TC எடுத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவ பரிசோதனை

அனைத்து சான்றிதழும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்படும். அவர்கள் குறிப்பிடும் ரயில்வே மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அங்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், பைல்ஸ் இருதயம் சார்ந்த நோய்கள் உள்ளதா என்று பார்க்கப்படும். பின்னர் கண்களை பரிசோதிக்கும் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். கண்களை பரிசோதித்த பின்னர் A1 சர்டிபிகேட் கொடுக்கப்படும். இதில் A1 சர்டிபிகேட் இல்லாத பட்சத்தில் நிராகரிக்கப்படுவர்.

இவ்வளவு தேர்வுகள் எழுதிய பிறகு கண்கள் பரிசோதனையில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவர். இதனால் இந்த தேர்விற்கு படிக்கும் முன்னரே தங்கள் கண்களை தேர்வர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top