Dhoni Entry IPL : இந்த மாதம் 22 ஆம் தேதி IPL போட்டி தொடங்குவதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் நடித்த லியோ படத்தின் பேடாஸ் பாடலை சென்னை சிஎஸ்கே அணி நிர்வாகம் அப்படியே ரீல்ஸ் செய்து வெளியிட்டது ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தாலும் தோனி அறிவிக்கும் வரை சென்னை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் சாதனை
ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். 2010,2011,2018,2021 மற்றும் 2023ல் கோப்பையை வென்று சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அதேபோல் சாம்பியன் ஸ்டோரீஸ் எனப்படும் 20 ஓவர் போட்டியையும் அவர் இருமுறை வென்று கொடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக முறை கோப்பை வென்றுள்ள அணியாக மும்பை அணியும் சென்னை அணியும் இருந்து இதில் அதிக முறை வெற்றி பெற்ற அணியை வழிநடத்திய தலைவராக தோனி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhoni Entry IPL இதுவரை 253 போட்டிகளில் விளையாடிய தோனி 5119 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் மொத்தமாக 24 அரை சதங்களை அடித்துள்ளார் மேலும் அவர் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் பல போட்டிகளில் அவர் விளையாடிய 20 30 ரன்கள் கூட போட்டியை முழுவதுமாக மாற்றக் கூடியதாக அமைந்துள்ளது.
இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் அவருடைய சராசரி 39 ரன்கள் ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 136.32 ஆக உள்ளது. இந்த ஆண்டு அவர் சென்னை அணிக்காக விளையாடுவது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கேப்டன்ஷியல் தொடர்வாரா என்பது சந்தேகத்தில் உள்ளது. இதனால் அணித்தலைவராக இந்தியாவை சேர்ந்த ருத்ராட்ச் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சினை போன்று பல புதிய பேஸ்மேன்கள் இந்திய அணிக்காக கிடைப்பது எளிது. ஆனால் தோனியை போன்ற ஒரு சிறந்த தலைவரை நாம் திரும்ப பெறுவோமா என்ற கருத்தை உன்னால் கிரிக்கெட் வீரர் தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் தோனி அடுத்த ஐ.பி.எல் விளையாட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்றும் அவர் பில்டிங் செய்யும் முறையை கண்டால் அவருக்கு வயதாகவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
தோனி போன்ற ஒரு சிறந்த தலைவர் இந்தியா அணிக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் எந்த ஆண்டு விளையாடி அதிக ரன்களை சேர்த்தால் அடுத்த ஆண்டும் சென்னைக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோனி சென்னையை விட்டு விலகிய பிறகு மும்பை அணியை வழிநடத்தி வந்த ரோகித் சர்மா சென்னை அணிக்காக விளையாடி தலைமை தாங்குவாரா என்று விளையாட்டு ரசிகர்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.