Railway jobs இந்த ஆண்டு ரயில்வேயில் ஆள்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு அட்டவணையை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் படிப்பு படித்த மாணவர்கள் வரை அனைவரும் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அறிவிப்பாக உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வாணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்து தேர்வை பத்தாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியான உதவி லோகோ பைலட் அறிவிப்பாணையுடன் டெக்னீசியன் பணிக்கான அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதேபோல் இந்த முறை டெக்னீசியன் பணிக்கான அறிவிப்பாணை வெளியாகாமல் உதவி லோகோ பைலட் பணிக்காக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. இதனால் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாணவர்களின் சிரமத்தை போக்கும் விதமாக டெக்னீசியன் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
9000 டெக்னீசியன் பணியிடங்கள்
railway jobs 9000 காலி பணியிடங்களை கொண்ட டெக்னீசியன் பணிக்கான அறிவிப்பாணை ஏப்ரல் முதல் ஜூன் வரை வெளியிடப்படும் என்று ரயில்வே தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த டெக்னீசியன் தேர்வை பத்தாம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி (ITI) படித்த மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வை எழுதலாம். இந்த டெக்னீசியன் தேர்வில் சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பணிக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கான தேர்வு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெறும் என்றும் இதற்கான பணியானை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று ரயில்வே தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Non technical popular category மற்றும் ஜூனியர் என்ஜினீயர் தேர்வு
NTPC எனப்படும் கிளார்க், நிலைய அதிகாரி, டிக்கெட் பரிசோதகர் போன்ற பணியிடங்களை உள்ளடக்கிய தேர்வுக்கான அறிவிப்பானையும் ஜூனியர் இன்ஜினியர் எனப்படும் பொறியியல் சம்பந்தமான வேலை வாய்ப்புக்கான விண்ணப்பம் ஜூலை முதல் செப்டம்பர் வரை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NTPC தேர்விற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வுக்கு பொறியியல் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Railway jobs Level 1 மற்றும் இதரத் தேர்வு
லெவல் 1 எனப்படும் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வெழுதெல்லாம். இதற்கான அறிவிப்பாணை இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் இதற்கான தேர்வு அடுத்த வருடம் நடைபெறும் என்றும் ரயில்வே தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ரயில்வேயில் உள்ள மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பானை வெளியிட்டு அடுத்த வருடம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.