தேர்வில் முதலிடம் பெற 5 வழிகள்?

தேர்வில் முதலிடம் பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும், பள்ளியில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் தேர்வர்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால் சிலரால் படித்த அனைத்தையும் நினைவு வைத்துக் கொள்ள இயலாது. படித்த அனைத்தையும் எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்வது என்ற இந்த ஐந்து பழக்கங்களை கடைப்பிடித்தால் படித்த பாடம் என்றுமே நினைவில் இருக்கும் என்று கல்வியாளர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

படித்த அனைத்தையுமே நினைவில் வைத்துக் கொள்வதற்காக வழிமுறைகள்

  1. படித்த அனைத்தையும் புத்தகத்தை பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும்.
  2. செல்போனில் ரெக்கார்ட் செய்து வைத்து விட்டு பின்னர் கேட்கவும்.
  3. படித்த பாடங்களை பிறருக்கு சொல்லிக் கொடுக்கவும்
  4. கதைகள் மற்றும் படங்களின் கேரக்டர்கள் மூலம் நினைவு கொள்ள வேண்டும்.
  5. பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தேர்வில் முதலிடம் மேற்கூறிய ஐந்து பழக்கங்களை நாம் கடைப்பிடிப்பதன் மூலமாக படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். வெற்றிக்கு என்றுமே குறுக்கு வழி கிடையாது முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சி மூலமாகவே நாம் வெற்றியை பெற முடியும்.

எழுதிப் பார்த்தல்: 

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு படித்த பாடத்தை எழுதிப் பார்க்காமல் இருப்பது. படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பதன் மூலமாக படித்த பாடம் எப்போதும் நினைவில் இருக்கும். எந்த இடத்தில் மறைக்கிறதோ அந்த இடத்தில் புத்தகத்தை திறந்து பார்த்து மீண்டும் படித்து எழுத வேண்டும். பொதுவாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் கேட்பதால் மாணவர்களுக்கு எவ்வாறு எழுதி பார்ப்பது என்ற சந்தேகம் உள்ளது.

உதாரணமாக கணித பாடத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்கள் ஃபார்முலா அனைத்தையும் எழுதி பார்க்க வேண்டும். மொத்தம் 20 பாடப் பகுதிகள் இருந்தால் 20 பேப்பர்களை எடுத்துக்கொண்டு அனைத்து ஃபார்முலாக்களையும் பார்க்காமல் எழுத வேண்டும். தினமும் படிப்பதற்கு முன்பாக இவ்வாறு செய்துவிட்டு படித்தால் அவர்களுக்கு மறக்கவே மறக்காதே என்பது ஆய்வில் வெளியான தகவல்.

6 முதல் 8 மணி நேரம் படிப்பதை ஒரு மணி நேரம் ஆவது எழுதி பார்க்க வேண்டும். பிடித்த பாடத்தை எழுதிப் பார்ப்பதன் மூலமாக மாணவர்கள் எளிதாக அவர்கள் வகுப்பறையில் “டாப்பராக” விளங்கலாம்.

ரெக்கார்டிங் செய்தல்

தற்போது மாணவர்கள் செல்போன் மூலமாக படிப்பதை அதிகம் விரும்புகின்றனர். செல்போன் என்பது தற்போது மாணவர்களின் அத்தியாவசிய தேவையாக ஆகி உள்ளது. ஆனால் இதை பல மாணவர்கள் தவறான செயல்களுக்காகவும் நேரத்தை வீண் அடிப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் வகுப்பறையில் “டாப்பர்” இருக்கும் சிலர் இதனை நல்ல முறையில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

SSC CHSL NOTIFICATION

படிக்கின்ற பாடத்தை அப்படியே கதையாக மாற்றி மாணவர்கள் ரெக்கார்ட் செய்ய வேண்டும். உதாரணமாக வரலாறு பாடத்தில் பத்து பாடங்கள் இருப்பின் பத்து ரெக்கார்டிங் செய்ய வேண்டும். அந்தப் பாடத்தில் என்ன கொடுத்திருக்கிறதோ அதை அப்படியே ரெக்கார்ட் செய்து திரும்பத் திரும்ப கேட்பதன் மூலமாக மாணவர்களின் மனதில் அது பதியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

சொல்லிக் கொடுத்தல்

படித்த பாடத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் படித்த பாடம் மறக்காமல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதன் காரணமாக சிறு வயதிலேயே அவர்களின் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. வகுப்பறையில் ஐந்து மாணவர்கள் இருந்தால் தனித்தனியாக 5 பாடங்களை படிக்க வேண்டும். பின்னர் அந்தப் பாடங்களை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலமாக மாணவர்களின் மனதில் அது எளிதாக புரியும். “வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களே இறுதி நேரங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் என்பது இறுதி தேர்விற்கு மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று மாணவர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.

நினைவு வைத்துக் கொள்ளுதல்: 

கடினமாக இருக்கும் படங்களை மாணவர்கள் சிறுகதைகள் மூலம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக வேதியல் பிரிவில் இருக்கும் அனைத்து உலோகங்களில் பெயரையும் எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக கதை போன்று அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

இது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நன்கு அறிந்த ஒரு யுக்தியாகும். இவ்வாறு நினைவு வைத்துக் கொள்வதன் மூலமாக கடினமான கேள்விகளுக்கும் மாணவர்கள் மிகவும் எளிதாக விடை அளித்து வகுப்பறையில் முதல் மாணவனாக இருக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் மாணவர்கள் மேற்கொள்வதன் மூலமாக அவர்கள் வகுப்பறையில் முதல் மாணவர்களாகவும் போட்டி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடியும்.

பயிற்சி: 

படித்த பாடங்கள் அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது பயிற்சி மட்டுமே. பாடங்களை படித்துக் கொண்டே செல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை படித்த பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும். பழைய வினா தாள்களை எடுத்து பயிற்சி செய்வது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும். பயிற்சி செய்யாத மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது என்பது கடினம். இதனால் பயிற்சியை மாணவர்கள் கைவிடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேலே கூறிய இந்த ஐந்து பழக்கங்களை மாணவர்கள் கடைபிடிப்பதன் மூலமாக போட்டி தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். இதே போல் பள்ளி மாணவர்களும் தாங்கள் பள்ளியில் முதல் மாணவனாக ஆகலாம். தற்போது போட்டி உலகம் என்பதால் போட்டி போட்டு முன்னேறுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பது நிதர்சனமான உண்மையாக இருந்து வருகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top