UTS Application : முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் எடுப்பதற்காக பிரத்யேக ஆப் ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பல வருடங்களாக இது நடைமுறையில் இருந்தாலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தற்போது வீடியோ ஒன்றை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
அனைவரது கையிலும் செல்போன்கள் இருந்தாலும் அதனை முறையாக பயன்படுத்தாமல் இருந்து வருகிறோம். முக்கியமாக சென்னையில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுப்பதற்காக பல மணி நேரங்கள் ரயில்வே கவுண்டரில் காத்துள்ளனர். தற்போது அனைத்து ரயில்வே கவுண்டர்களிலும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் UTS செயலியை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
UTS எனப்படும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு தங்கள் செல்போனுடன் UTSஐ இணைக்க வேண்டும். பிறகு தாங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்த பிறகு தங்களுக்கான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.
இந்த பிரத்தியேக ஆப் மூலம் ரயில் பயணிகள் கவுண்டரில் காத்திருக்காமல் செல்போன் மூலமாகவே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டை பெறுவதற்கு ரயில்வே டிராக்கிற்கு 100 மீட்டர் தொலைவில் இருப்பது முக்கியமாகும். இது பல பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால் இதும் கூடிய விரைவில் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த டிக்கெட் எடுக்கலாம்?
இந்த UTS செயலியில் R-walletல் முதலில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு Gpay,PayTm போன்ற ஆப்புகள் மூலமும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பிறகு இதனை பயன்படுத்தி ரயில் பயணத்தை மேற்கொள்ளும் போது டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதனை டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது தங்களது செல்போனை காட்டி செல்லலாம். இதன் மூலமாக பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் ரயில் பயண சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
டிக்கெட் எடுப்பது எப்படி?
முதலில் நார்மல் புக்கிங் எனப்படும் புக் அண்ட் ட்ராவல் பேப்பர்ஸ் (Book and travel paperless) செய்ய வேண்டும். எந்த ஸ்டேஷனில் ஏற வேண்டுமோ அதனை பதிவு செய்ய வேண்டும் பிறகு சென்று சேர வேண்டிய ஸ்டேஷன் பெயரை பதிவு செய்ய வேண்டும். இதனை பதிவு செய்த பின்னர் எவ்வளவு தொகை என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அடுத்த ட்ரெயின் என்ன என்பதை பார்த்த பிறகு புக் செய்யவும்.
Solar Panel அமைத்து ₹78,000 மானியம் பெறுவது எப்படி?
இதனை புக் செய்த உடனே தங்களுக்கு பேப்பர்லெஸ் டிக்கெட் எனப்படும் டிக்கெட் செல்போன் டிஸ்ப்ளேயில் காட்டப்படும். பயணத்தை முடிவு செய்த பின்னர் ஷோ டிக்கெட் என்பதை கிளிக் செய்து டிக்கெட் பரிசோதரிடம் காட்டி விட்டு செல்ல வேண்டும்.
இந்த UTSஐ பயன்படுத்துவதன் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய முடியும். நீண்ட வரிசையை குறைக்க முடியும். பேப்பரின் சேவையை குறைக்க முடியும் என்பது முக்கிய வசதிகளாக இருக்கும் என்பதால் ரயில் பயணிகள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் பெற்று கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பாக கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Pingback: வெறும் 10 ரூபாய் தான்..அதிரடியாக குறைக்கப்பட்ட ரயில் கட்டணம்! - YuvBharat
Pingback: ரயில்வே WhatsApp Channel! எதற்கு தெரியுமா? - YuvBharat