IDBI வங்கியில் உதவி மேலாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ச்சி பெரு மாணவர்களுக்கு ஒரு வருட காலம் பயிற்சி வழங்கப்பட்டு உதவி மேலாளர் பணி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 12-02-2024 முதல் 26-02-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதன் தேர்வு மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு
இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்ய குறைந்தபட்ச வயது 20 வயது என்றும் அதிகபட்ச வயது 25 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்புக்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பயின்று இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD மாணவர்களுக்கு 200 ரூபாய் எனவும் மற்ற பிரிவினருக்கு ₹ 1000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கணிதம், அறிவுக்கூர்மை, ஆங்கிலம் மற்றும் நடப்பு நிகழ்வு கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு கணினி வாயிலாக 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் ஒரு வருட பயிற்சி வகுப்புக்கு பின்னர் உதவி மேலாளராக பணி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதாந்திர உதவி தொகையும் வழங்கப்படும்.
இந்த பயிற்சிக்கு மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் ஆகும் எனவும் இதனை வேலை வாய்ப்பு பெற்ற பின்னர் அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ஊதியமாக குறைந்தபட்சம் 50,000 கிடைக்கும் என்றும் வருடாந்திர சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெரும் மாணவர்கள் தங்களது பயிற்சி நிறைவு செய்த பிறகு இந்த வங்கியில் மூன்று வருடங்கள் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வங்கி தேர்வு என்பது இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஆனால் இத்தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும். இதனால் வங்கி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்று பணியில் அமர்வது எளிதாக உள்ளது. மேலும் ஒரு வருட பயிற்சி மூலம் அவர்களுக்கு வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் பணி அமர்த்தபட்ட பின்னர் ஏற்படும் சிரமங்கள் விரைவாக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வங்கி தனியார் வங்கி என்பதால் பல்வேறு மாணவர்கள் இத்தேர்வினை எழுத முன் வருவதில்லை. ஆனால் தனியார் பொதுத்துறை வங்கிகளில் கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளும் இங்கு அளிக்கப்படும் என்றும் வேலை உத்திரவாதம் என்பது உறுதியாக உள்ளது என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆன்லைன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோல் வேலைவாய்ப்பு தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.