RPF காலிப் பணியிடங்கள் வெளியீடு

rpf 2024

RPF 2024: ரயில்வே பாதுகாப்புப் படையில் RPF மூலம் 4660 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே ரயில்வே தேர்வாணையம் அறிவித்திருந்தது.

RPF காலிப் பணியிடங்கள்

ஜனவரி 2, 2024 அன்று ரயில்வே தேர்வாணையம் RPF காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. RPFக்கு கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மொத்தம் 4660 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே தேர்வாணையம் அதற்கான தேதியை மட்டும் குறிப்பிடாமல் வைத்திருந்தது. தற்போது வெளியாகி உள்ள எம்பிளாய்மெண்ட் நியூஸ் செய்திதாளின்படி RPF 15-04-2024 அன்று வெளியிட்டபட்டு 14-05-2024 தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 2024 இல் RPF ஆட்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பினால் கடினமாகப் படிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக அப்ளை செய்வதற்கான லிங்க் திறந்தவுடன் RPF ஆட்சேர்ப்பு 2024க்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.  RRB நாடு தழுவிய ஆள் சேர்ப்பு மூலம் எந்த தேர்வை நடத்தும்.

தேர்வு முறை :

இந்த தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்

Stage 1 – Computer Based Test

Stage 2- Physical efficiency Test, Physical measurement Test

Stage 3- Document Verification

தேர்வுRailway Protection Force
தேர்வின் பெயர்RPF Notification 2024
காலி பணியிடங்கள்4660
அறிவிப்பு தேதிApril 2024
இணையதளம்Rpf.indianrailways.gov.in

தேர்வு கட்டணம்

விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த விண்ணப்ப கட்டணம் அவர்களது வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

பிரிவுதேர்வு கட்டணம்
General/OBC500
SC/ST/Female/Ex. Servicemen/EBC250

Central Bank of India வங்கியில் Graduate apprentices 2024

வயது வரம்பு

RPF 2024 கான்ஸ்டபிள் தேர்விற்கு 18 வயது முதல் 28 பூர்த்தி செய்திருக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 28 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அரசு விதிமுறைக்குட்பட்டு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் 9000 காலி பணியிடங்கள்- முக்கிய அறிவிப்பு!

காலி பணியிடங்கள்

மொத்தம் 4660 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவானது என்றாலும் மாணவர்கள் நன்கு தயார் செய்தால் கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கு மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிகம் இருக்கும் என்பதால் மாணவர்கள் அதிக கவனம் எடுத்து தயார் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கான்ஸ்டபிள்4208
சப் இன்ஸ்பெக்டர்452

3 thoughts on “RPF காலிப் பணியிடங்கள் வெளியீடு”

  1. Pingback: ரயில்வே WhatsApp Channel! எதற்கு தெரியுமா? - YuvBharat

  2. Pingback: புதிதாக உருவெடுக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்!  - YuvBharat

  3. Pingback: DELHI & CAPF SI காலி பணியிடங்கள்? விண்ணப்பியுங்கள்!! - YuvBharat

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top